அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்

திருமங்கலத்தில் மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்களை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் வழங்கினார்.
திருமங்கலத்தில் மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்களை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் வழங்கினார்.
Updated on
1 min read

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை ஒவ்வொரு தொண்டனும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என, அமைச்சர் ஆர்பி. உதயகுமார் வலியுறுத்தினார்.

மதுரை திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவையின் சார்பில், மக்களுக்கு முகக்கவசம், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் அதிமுக ஆட்சி 100 ஆண்டு அல்ல 200 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் நீடிக்கும்.

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியாணா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் பங்களிப்பு 27 சதவீதம் எனக் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் அயராத உழைப்பால் தமிழகம் முதன்மை பெறுகிறது. கரோனா நோய்த் தடுப்பிலும், தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.

கடந்த மூன்று மாதத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களும் இந்த ஆட்சியை நல்லரசாக போற்றுகின்றனர்.

ஆனாலும், மக்களை திசை திருப்பும் வேலையை மட்டும் கடமையாக மேற்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

இவரை மக்கள் மறந்து பல ஆண்டாகிவிட்டது. மக்கள் மனதில் முதல்வர் தான் இருக்கிறார் என்பதை ஏற்க மனமின்றி அவர், அடிப்படை ஆதாரமற்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார். அவரது நாடகத்தைப் பார்த்து ரசிக்க ஆட்கள் இல்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்வரின் சாதனை திட்டங்களை மக்களிடத்தில் ஒவ்வொரு தொண்டனும் எடுத்துச் சொல்லவேண்டும். இதை உறுதி ஏற்கும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில், தீர்மானமானக நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in