கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 243 பேருந்துகள் இயக்கம்; பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் 243 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப் பேருந்து போக்குவரத்து இன்று (ஜூன் 1) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி 2-வது மண்டலத்தின் பகுதிகளிலும், அருகில் உள்ள மற்ற மாவட்ட எல்லைப் பகுதி வரையிலும் பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் இயக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் மூலம் 50 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று காலை புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, முன்னதாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாத பயணிகளுக்குப் பேருந்தில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 60 சதவீதப் பயணிகளுடன் 178 டவுன் நகரப் பேருந்துகளும், 65 புறநகர் பேருந்துகளும் என மொத்தம் 243 பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பல நகரப் பேருந்துகளில் மிகக் குறைந்த பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in