விருதுநகரில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி 

விருதுநகரில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி 
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது ஏ இராமலிங்கபுரம் அந்தப் பகுதியிலுள்ள மேலத்தெருவைச் சேர்ந்தவர் எல்லம்மாள் வயசு 78 மூதாட்டியான இவர் அந்தப் பகுதியில் உள்ள பழைய காரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இன்று காலை 6 அரை மணி அளவில் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள பாத்ரூமிற்கு சென்று விட்டு தண்ணீர் ஊற்றும் போது

வீட்டின் பழைய சுவர் அவர் வீடு இடிந்து விழுந்தது இதில் எல்லம்மாள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்

இது பற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டி செல்லம்மாளின் உடலை மீட்டனர்

வன்னியம்பட்டி போலீசார் இறந்த எல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in