

வருகிற 2021 தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற அயராது களப்பணியாற்றிடுவோம் என அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், கல்லுப்பட்டி யில் ஜெயலலிதா பேரவை சார்பில், பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை ஏற்று, நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜெயலலிதா தொடர் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த நான்காண்டு நிறைவுற்று, 5-ம் ஆண்டு துவங்கும் நாள் இன்று. சட்டப்பேரவையில் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவரது லட்சியத்துடன் சரித்திரம் போற்றும் இந்த அரசை மக்கள் பாராட்டுகின்றனர்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், புதிய தொழில் புரட்சியை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க, தொழில் முதலீடுகளை ஈர்க்க, வெளிநாடு சென்று ரூ. 8,835 கோடி முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்தது.
இந்தியாவியேயே நல்லாளுமை பெற்ற மாநிலமாக தமிழகத்தை முதலிடம் பெற வைத்து, மத்திய அரசால் விருது பெற வைத்தது. நடந்தாய் வாழி காவிரி திட்டம் போன்ற பல்வேறு பல்வேறுதொலை நோக்கு திட்டங்களை நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றிய சாதனை படைத்தது வரவேற்கிறோம்.
கரோனா வைரஸ் நோயிலிருந்து, மக்களைக் காக்க இரவு, பகல் பாராது மக்கள் பணியாற்றி தமிழக மக்களை காத்து பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் மத்திய அரசின் பாராட்டைப் பெற்றது மட்டுமின்றி, எந்த இயற்கை சீற்றம்ஏற்பட்டாலும் மக்களை காப்போம் என, முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டெடுத்து, ஜெ.,வழியில் ஒன்றரை கோடி தொண்டர்களின் கனவை நனவாக்கி பொற்கால ஆட்சியை நடத்தும் முதல்வர், அவரது உறுதுணையாக இருக்கும் துணை முதல்வருக்கும் ஜெ., பேரவை சார்பில் நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறோம்.
ஐந்தாமாண்டு தொடக்க ன்னாளில் 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி வாகை சூட அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது, எதிர்க்கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கச்செய்து, 3-ம் முறையாக ஆட்சி அமைத்தோம் என்ற அழியாப் புகழை முதல்வர் துணை முதல்வரிடம் சமர்pபிக்கும் வரை அயராது களப்பணியாற்றுவோம் என, இந்தநாளில் சூளுரை ஏற்போம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் ஜெ.,பேரவை இணைச் செயலர் இளங்கோவன்,புறநகர் மாவட்ட செயலர் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.