

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா சமயத்தில் துரதிர்ஷ் டவசமாக மத்திய அரசு இரண்டு நிதியாண்டுக்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக ரத்து செய்துள்ளது. இது தேவையற்ற ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது.
கரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் இந்நேரத்தில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் உரிமத்தை வழங்க சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இச்சட்டத்தை எங்கள் மாநிலத்தில் முழுமையாக எதிர்க்கிறோம். கரோனா தடுப்புச் சூழலில் இச்சட்டத்தை கொண்டு வந்து, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கக் கூடாது. இதுதொடர்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்.
புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கி றோம். மே 17-ம் தேதிக்குப் பிறகு திறக்கலாம் என்று அமைச் சரவையில் முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.