

இந்தியாவில் கரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கையொட்டி இந்த பேரிடரில் இருந்து பொது மக்களை காக்க, பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக்கு அனைத்து ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
500-க்கு மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய ஐந்து நாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். இதுவரை மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் சார்பில், ரூ. 95 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு தன்னார்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் முத்தாய்ப்பாக ரயில்வே பயணிகள் ரயில் ஓட்டுனர் ஜேம்ஸ் செல்வராஜ் தனது மாத வருமானத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.
அவரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.