

மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நித்திய பூஜைகளுடன் மே 4-ம் தேதி(நாளை) காலை 9.05 மணியிலிருந்து 9.29 மணிக்குள் சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, 4 சிவாச்சாரியார்கள் மட்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை வீட்டிலிருந்தபடியே பக்தர்கள் தரிசிக்க நாளை காலை 8.40 மணிமுதல்10.15 மணிவரை ‘இந்து தமிழ்’ஆன்லைனில் ஏற்பாடு செய்துள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க https://www.hindutamil.in/special/meenakshithirukkalyanam எனும் வலைப்பக்கத்தில் இணைந் திருங்கள்.