

காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அண்ணா ஹசாரே தலைமையில் மன்னார்குடியில் செப்டம்பர் 21-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இது தொடர்கிறது. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத தாலும், வறட்சி - வெள்ள கால விவசாயக் கடன்களின் சுமையா லும், பயிர்க் கடன் வட்டி உயர்வா லும் நிலைகுலைந்து போயுள்ள விவசாயிகள் வேறு வழியில்லா மல் தற்கொலை செய்துகொள் கின்றனர்.
இந்த நிலையை மாற்ற, விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையுடன், 50 சதவீதம் கூடுதல் விலை வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். முந்தைய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். முந்தைய அரசு அறிவித்தபடி பயிர்க் கடனுக்கு 4 சதவீதம் வட்டி மட்டுமே நிர்ணயிக்க வேண்டும்.
காவிரி டெல்டா மக்கள், விவசாயி களைக் கடுமையாகப் பாதிக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, மீத்தேன், ஷேல் கேஸ், நிலக்கரி எடுக்கும் திட்டங்களை உடனே கைவிட வேண்டும். விளைநிலங்களை அபகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை உடனே கைவிட வேண் டும்.
இயற்கை வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும், தமிழகம் மற்றும் காவிரி டெல்டா விவசாயி களின் வாழ்வாதாரத்தைக் காக்க வும் கோரி போராட்டங்கள் வலுத்து வருவதால், அதை ஒருங்கி ணைத்து விவசாயிகளின் பிரச்சி னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே தீர்வு காண வலியுறுத்தி, அண்ணா ஹசாரே தலைமையில் மன்னார்குடியில் செப்டம்பர் 21-ம் தேதி போராட் டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டம், விவசாயி களின் பிரச்சினைகள் குறித்து புதிய பார்வையை ஏற்படுத்தும். நாட்டை காப்பதற்காக பாடுபட்டமுன்னாள் ராணுவத்தினரின் முக்கிய கோரிக்கைகளுக்காகவும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் தென்னிந் திய பிரதிநிதி ரவிகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்க கூட்டமைப்புத் தலைவர் சி.டி.அரசு, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி த.புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.