மாணவர்களின் குடும்பத்திற்கு உதவிய ஆசிரியர்கள்
மாணவர்களின் குடும்பத்திற்கு உதவிய ஆசிரியர்கள்

ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்

Published on

ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் 53 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் இல்லங்களுக்கு ரூ.600 மதிப்புள்ள மளிகை பொருட்கள், கிருமிநாசினி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் லட்சுமி, ராஜ்குமார், ராம்குமார், சிவக்குமார், ஆனந்தகோபாலகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர், மாணவர்களின் வீடுகள் அமைந்துள்ள ஜோதிநகர், நாச்சகவுண்டனூர், காமராஜ் நகர், கெங்கிநாயகன்பட்டி, படதாசம்பட்டி ஆகிய குக்கிராமங்களுக்குச் சென்று நேரில் பொருட்களை வழங்கினர். மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in