கோவையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவளித்த 'ஈதல்' அமைப்பு

கோவை மாவட்ட கேட்டரிங் உரிமையாளர்கள் சங்கம், ஈதல் அமைப்பு சார்பில் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தயாரிக்கப்படும் உணவு. | படம்: ஜெ.மனோகரன்
கோவை மாவட்ட கேட்டரிங் உரிமையாளர்கள் சங்கம், ஈதல் அமைப்பு சார்பில் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தயாரிக்கப்படும் உணவு. | படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை மாவட்ட கேட்டரிங் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஈதல் அமைப்பு சார்பில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி விடுதியின் சமையல் கூடம் மற்றும் இட வசதிகளை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கேட்டரிங் உரிமையாளர் சங்கத் தலைவர் மாதம்பட்டி நாகராஜ் கூறும்போது, "கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, தரமாகவும், சுவையாகவும் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

தொண்டாமுத்தூர், நீலிகோணாம்பாளையம், பேரூர், கீரநத்தம், கண்ணப்பநகர், காளப்பட்டி, ரத்தினபுரி, சங்கனூர், கணபதி, சிங்காநல்லூர், ஆவாரம்பாளையம், பன்னிமடை, துயடிலூர் பகுதிகளில் தினமும் மதியம் 7,500 பேருக்கும், இரவு 3,000 பேருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வடக்கு தாசில்தார் மகேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தாமரைசெல்வன் ஆகியோரது அறிவுறுத்தல்படி உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. மேலும், காவல், சுகாதாரம், வருவாய் துறை மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in