

கரோனா வைரஸ் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீரை வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் பருகலாம் என்று முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர்கள், காவல்துறை உட்பட கரோனா வைரஸ் தடுப்பு பணி களில் ஈடுபட்டுள்ள துறைகளுக்கு சுகாதாரத் துறை் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கரோனா வைரஸ் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதிகளில்வசிப்பவர்களுக்கு ஜிங் மாத்திரை (150 எம்ஜி), வைட்டமின் சி அல்லதுஅனைத்து வைட்டமின்கள் உள்ளடக்கிய மாத்திரை 10 நாட்களுக்கு தினமும் வழங்க வேண்டும்.
இதேபோல், நிலவேம்பு குடிநீர்மற்றும் கபசுரக் குடிநீர் கொடுக்க வேண்டும். 5 கிராம் நிலவேம்பு குடிநீர் பவுடர் அல்லது கபசுரக்குடிநீர் பவுடரை 240 மி.லி. தண் ணீரில் போட்டு 60 மி.லி. வரும் வரை நன்றாக கொதிக்க வைத்து 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இதுவே சிறார்களாக இருந்தால் அவர்களுக்கு 30 மிலி குடிநீரே போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.