

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்றுசென்னை முகவர்களில் ஒருவ ரான டி.விஜயகாந்த் பேசுகிறார்...
சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சிட்லப்பாக்கம், மேடவாக்கம் பகுதி முழுக்க நான்தான் ஏஜென்ட். ஆயிரம் பேப்பருக்கு மேல போடுறேன். காலையில 6.30 மணிக்கு மேலேயும் பேப்பர்வராட்டி போன் போட ஆரம்பிச்சிடுவாங்க. அதுல ஒருத்தர் பெரும்பாக்கம் எஸ்.கணேசன் சார்.காலையில பேப்பர் வரலைன்னாஅவருக்கு இருப்பு கொள்ளாது.அவரும், அவருடைய மருமகளும் மாறிமாறி போன் போடு வாங்க.
ஒருநாள் அவர்கிட்ட காரணம்கேட்டேன். “என்னால ‘இந்து தமிழ்’ படிக்காம ஒரு நாள்கூட இருக்க முடியாது. வீடு மெயின் ரோட்ல இருந்து ரொம்ப தள்ளியிருக்கிறதால, கடைக்குப் போயும் பேப்பர் வாங்க முடியாது. சென்னைக்கு வந்து 5 வருஷம் ஆகுது. மொத்தம் 7 நாட்கள் எனக்கு பேப்பர் வரலை. அந்த ஏழு நாட்களும் நான் பட்ட அவஸ்தை இருக்குதே... ‘பையன் வர மாட்டான். இனிமேல் பேப்பர் போட மாட்டான்’னுஎன்னை நானே சமாதானப்படுத் திக்கவே பகல் 11 மணி ஆகிடும்”னு சொல்வாரு.
“எப்படி சார், ‘இந்து தமிழ்’வாசகரானீங்க?”ன்னு கேட்டேன்.“திருச்சியில் இருக்கும்போது எதிர்த்த வீட்டில் ஒருத்தர் வாங்கினார். பண்டமாற்று முறையில ரெண்டுபேரும் பேப்பரை மாத்திக்குவோம். ஏழு நாளும் ஏழு இணைப்பிதழ்களோட, ஒரு மேகசின் மாதிரி பல்சுவை செய்திகளையும் தாங்கி வந்ததால, ஏஜென்ட்கிட்ட சொல்லி நானும்‘இந்து தமிழ்’ வாங்க ஆரம்பிச் சிட்டேன்”னு சொன்னாரு.
ஊரடங்கு நேரத்துல கிட்டத்தட்ட எல்லா வாசகர்களுமே கணேசன் சார் மாதிரி ஆகிட்டாங்க. அதனால, ஒரு வீடுகூட தவறாம எல்லா வீட்டுக்கும் பேப்பர் போடுறதுல ரொம்ப கவனமா இருக்கோம். “இந்தமாசம் பேப்பர் வருமோ, வராதோன்னுருந்தேன். ஆனா, வழக் கத்தைவிட சீக்கிரமா பேப்பர் வந்துடுது’’ன்னு கணேசன் சார் ரொம்ப சந்தோஷத்துடன் சொன்னார்.