கள்ளச்சந்தை மது விற்பனை குறித்து டிஜிபி, ஐஜி, எஸ்எஸ்பியுடன் இணைந்து காவல் நிலைய அதிகாரியிடம் விசாரணை- துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை

கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரி காராமணி குப்பம் பகுதியில் உள்ள அரசு குடோன் ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபான பெட்டிகளை நேற்று கணக்கெடுக்கும் கலால் துறையினர். படம்: எம்.சாம்ராஜ்
கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரி காராமணி குப்பம் பகுதியில் உள்ள அரசு குடோன் ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபான பெட்டிகளை நேற்று கணக்கெடுக்கும் கலால் துறையினர். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பது குறித்து தெரியவந்தால் தொடர்புடைய காவல் நிலைய அதிகாரியிடம் டிஜிபி, ஐஜி, எஸ்எஸ்பியுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதை யடுத்து, மதுபானங்களை பதுக்கி வைத்து விற்கும் போக்கு அதிகரித் தது. இதையடுத்து மதுபானக் கடைகள், பார்களுக்கு சீல் வைக் கப்பட்டன.

மதுபானக் குடோன்களில் இருப்புக் கணக்கு சரிபார்க்கப்பட்டு 24 கடைகள் வரை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவளக்குப்பம் காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட திம்பநாயக்கன்பாளையம் ஏரிக் கரையில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்கு வதாகவும், அதிகமானோர் அங்கு கூட்டமாகக் கூடுவதால் தகராறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் நேற்று தெரிவித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ அங்கு விரைந்து சென்றார்.

அங்கு தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த பானைகளை இறக்கி சாலையில் போட்டு உடைக்க அவர் நடவடிக்கை எடுத்ததுடன், கள் விற்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

துணைநிலை ஆளுநர் எச்சரிக்கை

இந்நிலையில், புதுச்சேரியில் தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் வருவதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு காரணம் போலீஸாரின் கவனக்குறைவு தான். கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால், அவ்வாறு விற்பனை நடந்தகாவல் நிலைய அதிகாரி காணொலியில் விசாரிக்கப்ப டுவார்.

இவ்விசாரணையை துணைநி லை ஆளுநர், டிஜிபி, ஐஜி, எஸ்எஸ்பி ஆகியோர் மேற்கொள் வார்கள். இது, திங்கள்(இன்று) முதல் நடைமுறைக்கு வரும்.

போலீஸாரிடம் விசாரிப்பது போல கலால் துறையினரையும் தலைமைச் செயலர் மற்றும் துறைச் செயலர் ஆகியோருடன் இணைந்து விசாரிக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in