27 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறப்பு

மெட்ரோ ரயில் நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டை திறந்து வைக்கும் பெண் பயணி. அருகில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டை திறந்து வைக்கும் பெண் பயணி. அருகில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்.

Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் 27 மெட்ரோ ரயில் நிலை​யங்​களில், பயணி​களின் வசதிக்​காக, கூடு​தலாக 55 நகரும் படிக்​கட்​டு​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில், 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

பாது​காப்​பான, விரை​வான, சொகு​சான பயணம் காரண​மாக, மெட்ரோ ரயில்​களில் பயணிப்​போர் எண்​ணிக்கை நாள்​தோறும் உயர்​கிறது. பயணி​களின் எண்​ணிக்கை உயர்​வதற்கு ஏற்ப, அவர்​களின் தேவை​களை, வசதி​களை நிறைவேற்​று​வது அவசி​ய​மாகிறது.

அந்த வகை​யில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்​டம் மற்​றும் அதன் நீட்​டிப்பு வழித் தடத்​தில் உள்ள 27 மெட்ரோ ரயில் நிலை​யங்​களில், 55 நகரும் படிக்​கட்​டு​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

இந்த கூடு​தல் வசதி​யை, மெட்ரோ ரயில் பயணி​கள் திறந்து வைத்​தனர். இந்​நிகழ்​வில், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் இயக்​குநர் மனோஜ் கோயல், (அமைப்​பு​கள் மற்​றும் இயக்​கம்), தலைமை ஆலோ​சகர் கோபி​நாத் மல்யா (இயக்​கம் மற்​றும் பராமரிப்​பு), பொது​மேலா​ளர் எஸ்.சதீஷ் பிரபு (இயக்​கம் மற்​றும் பராமரிப்​பு) உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த கூடு​தல் வசதி​யின் மூலம், ஏற்​க​னவே இருந்த 226 நகரும் படிக்​கட்​டு​களு​டன், புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள 55 நகரும் படிக்​கட்​டு​களும் சேர்த்து நகரும் படிக்​கட்​டு​களின் எண்​ணிக்கை தற்​போது 281 ஆக உயர்ந்​து உள்ளன.

குறிப்​பாக, திரு​மங்​கலம் மற்​றும் அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா 5 நகரும் படிக்​கட்​டு​களும், வடபழனி மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் 4 நகரும் படிக்​கட்​டு​களும், ஆயிரம் விளக்​கு, அண்ணா நகர் கோபுரம் மற்​றும் அரசினர் தோட்​டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா 3 நகரும் படிக்​கட்​டு​களும், ஏஜி-டிஎம்​எஸ், ஈக்​காட்​டு​தாங்​கல், கிண்​டி, தியாக​ராஜ கல்​லூரி, விம்​கோநகர் பணிமனை, சென்ட்​ரல், வண்​ணாரப்​பேட்​டை, எல்​ஐசி, நேரு பூங்​கா, விமான நிலை​யம், அசோக் நகர், எழும்​பூர், நந்​தனம் ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா 2 நகரும் படிக்​கட்​டு​களும், பரங்​கிமலை, சின்​னமலை, உயர்​நீ​தி​மன்​றம், மண்​ணடி, தேனாம்​பேட்​டை, தண்​டடை​யார்​பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா ஒரு நகரும் படிக்​கட்​டு​களும் கூடு​தலாக நிறு​வப்​பட்​டுள்​ளன.

இந்த நகரும் படிக்​கட்​டு​களை நிறு​வி செயல்​படுத்​தும் பணி பெரும் சவாலாக இருந்​தது. ஆனாலும், மெட்ரோ ரயில் சேவை​கள் இல்​லாத நேரங்​களில் இப்​பணி​களை மேற்​கொண்​டு, வெற்​றிகர​மாக நிறைவு செய்​தனர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

<div class="paragraphs"><p>மெட்ரோ ரயில் நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டை திறந்து வைக்கும் பெண் பயணி. அருகில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்.</p></div>
போலீஸார் மீது கல்வீசி தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in