கரோனா பரிசோதனை முடிவு வரும் முன் பெருந்துறை மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மூதாட்டி காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கரோனா தொற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 68 வயது மூதாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மூன்று நாட்களுக்கு முன்பு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரழிவு நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு இருந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (ஏப்.15) இறந்தார்.

அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே, அவர் இறந்த நிலையில், மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தால், அவர்களது ரத்த மாதிரியின் சோதனை முடிவு வருவதற்கு முன்பு உடலை அடக்கம் செய்யக் கூடாது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சத்தியமங்கலம் மூதாட்டியின் உடலை, சோதனை முடிவு வருவதற்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in