Published : 05 Apr 2020 03:10 PM
Last Updated : 05 Apr 2020 03:10 PM

ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ரூ.3.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட நவீன கிருமி நாசினி தெளிப்பான்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், கோபி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக நவீன கிருமி நாசினி தெளிப்பான் எந்திரம் ஈரோடு மாவட்டத்திற்காகவாங்கப்பட்டு உள்ளது.

இந்த நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று இதனை கலெக்டர் கதிரவன், கே எஸ் தென்னரசு எம்எல்ஏ, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த புதிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அவர்கள் பார்வையிட்டனர். இப்போதைய எந்திரம் இரண்டாயிரம் கொள்ளளவு கொண்டது.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும். நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் சண்முகவடிவு, நகர் நல அலுவலர் முரளி சங்கர், ஆர்டிஓ முருகேசன் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x