எளிதில் கெட்டுப்போகும் உணவுப் பொருட்களை விற்க அதிகாரிகள் உதவ வேண்டும்: மதுரை கீழமாசிவீதி வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள்

எளிதில் கெட்டுப்போகும் உணவுப் பொருட்களை விற்க அதிகாரிகள் உதவ வேண்டும்: மதுரை கீழமாசிவீதி வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள்
Updated on
1 min read

கரோனா பாதிப்பால் நாடேங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர்.

சமூக விலகலை பின்பற்ற மக்கள் பழம், காய்கறிகள் வாங்க அந்தந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரி மைதானங்களில் காய்கறிகள் கடைகளும் 100 வார்டுகளிலும் குறிப்பிட்ட ஓரிடத்தில் வாகனத்தில் வைத்து காய்கறிகள் விற்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், நகரில் பல்வேறு இடங்களில் அந்தந்த பகுதியில் செயல்படும் சிறிய மளிகைக் கடைகளில் பலசரக்கு பொருட் களுக்கு விற்றுத் தீர்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை கீழமாசி வீதியில் செயல்படும் சில பலசரக்கு மொத்த வியாபார கடைகளில் சிறு வியபாரிகள் பொருட்கள் வாங்க முடியாததால் இந்நிலை ஏற்படுகிறது என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியது: நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கவும், கரோனாவைத் தடுக்கவும் சமூக விலகல் முறையை பின்பற்றவும் அதிகாரிகள் உதவுவதைப் பாராட்டுகிறோம்.

இதே போன்று மதுரை கீழமாசி வீதியில் செயல்படும் சுமார் 100 பலசரக்குக் கடைகளில் விரைவில் கெட்டுப் போகும் உணவுப் பொருட்களை விற்க அதிகாரிகள் உதவ வேண்டும். அப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதால் பொருட்கள் சேதமடைகின்றன. வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க கீழமாசிவீதி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ளே மக்கள் செல்ல ஒருபாதை ஏற்படுத்தவேண்டும்.

குறிப்பிட்ட கடைகள் மட்டும் ஒருநாள்விட்டு ஒருநாள் திறந்து, குறிப்பிட்ட நபர்களை பொருட்கள் வாங்க அனுமதிக்கவேண்டும்.
அந்த குறித்த கடைகளில் பொருட்கள் விற்கும் வரை அனுமதித்தால் மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்.

வணிகர்களும் முதலீட்டை இழக்காமல், தொற்று நோய் பரவலும் தடுக்கப்படும். இது தொடர்பாக ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் நடவடிக் கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in