144 தடை: காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

காய்கறி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
காய்கறி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த 144 தடை உத்தரவை அறிந்த மக்கள் உடனடியாக ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களை வாங்கத் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதன்படி, கிருஷ்ணகிரியில் நாள்தோறும் அதிகாலையில் நடைபெறும் சந்தையில் இன்று வழக்கத்தை விட பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மக்கள் கூட்டம் ஒரே நேரத்தில் திரண்டதால் சந்தை நடக்கும் சாலையே மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in