‘இந்து தமிழ் திசை’, எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி இணைந்து வழங்கும் உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே: சென்னையில் இன்று நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’, எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி இணைந்து வழங்கும் உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே: சென்னையில் இன்று நடைபெறுகிறது
Updated on
1 min read

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘டிஜிட்டல் பெண்ணே’ எனும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் வைஷ்ணவா மகளிர் கல்லூரியுடன் இணைந்து வழங்குகிறது.

நவீன அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள், சமூக வலைதளங்களை எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அவற்றின் சாதக - பாதகங்களை அறிந்து தெளியும் வகையிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் வைஷ்ணவா மகளிர் கல்லூரி அரங்கத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காலா, சைபர் நிபுணர் வினோத் ஆறுமுகம், உளவியலாளர் ஜான்சி ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் தொடர்பான விளக்கங்களை அளிப்பதோடு, மாணவியரின் சந்தேகங்களுக்கும் விளக்கங்களை அளிக்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in