ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் அச்சம்: 800 தமிழக மீனவர்களை மீட்க அரசுக்கு டி.ஆர்.பாலு கடிதம்

ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் அச்சம்: 800 தமிழக மீனவர்களை மீட்க அரசுக்கு டி.ஆர்.பாலு கடிதம்
Updated on
1 min read

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சீனா மற்றும் கொரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் கோவிட்-19 காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, ஈரான் மற்றும் அருகில் உள்ள கிஸ், அசாலுயே, காம்கு மற்றும் ஸ்ட்ராக் போன்ற தீவுகளில் 800-க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட மீனவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், சீனாவின் வூகான் மற்றும் யோகோகாமா நகரில் இருந்து, இந்தியர்களை மீட்டதைப் போல, தமிழக மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in