ஹாட் லீக்ஸ்: ஓவராத்தான் போராரு ஓபிஆர்!

ஹாட் லீக்ஸ்: ஓவராத்தான் போராரு ஓபிஆர்!

Published on

பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இதைக் கண்டித்து, கடந்த மாதம் கம்பம் வந்த ரவீந்திரநாத்துக்கு எதிராக முஸ்லிம்கள் கறுப்புக்கொடி காட்டினார்கள். இதை எதிர்த்து அதிமுகவினர் நான்கைந்து பேர் மட்டும் சாலை மறியல் செய்து அசிங்கப்பட்டார்கள். இந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காக அடுத்த இரண்டே நாளில் எச்.ராஜாவை தேனி மாவட்டத்துக்கு அழைத்துவந்து போடியில் ஒரு ஊர்வலமும், பெரியகுளத்தில் ஒரு கூட்டமும் நடத்தினார்கள்.

அப்போது முஸ்லிம் தெருக்களில் வீட்டுக்கொரு போலீஸையும் நிறுத்தினார்கள். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ரவீந்திரநாத் குமார் தொகுதிக்கு வரும்போதெல்லாம் 2 எஸ்பி-க்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பந்தோபஸ்துக்கு வந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “அப்பாவுக்கு கொடுத்த இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றதால் தந்திரமாக பேசி தனக்கு போலீஸ் பாதுகாப்பை வாங்கிருச்சே தம்பி” என அதிசயித்துப் பேசுகிறது தேனி அதிமுக வட்டாரம்.

- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 23, 2020)

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in