

பல்லடம் அருகே காவல் உதவிஆய்வாளர்போல் காக்கி உடைய ணிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட இளைஞர், உண்மையான காவல் துறையினர் விசாரித்ததில், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றபோது வேன் மீது மோதி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட 63-வேலம்பாளையத்தில் இருந்து சின்னக்கரை செல்லும் சாலையில், காவல் உதவி ஆய்வாளர் போல் தினேஷ் என்ற பெயரில் ஒருவர் நேற்று சீருடையில் வாகன தணிக்கை செய்துள்ளார். அந்த இளைஞரை, அதற்கு முன் பார்க்காத உள்ளூர் பொதுமக்கள், சந்தேகமடைந்து பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்று அவரிடம் போலீஸார் விசாரித்த போது, அவர் போலியாக காக்கிஉடை அணிந்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. கண்ணிமைக் கும் நேரத்தில், தான் நிறுத்தி வைத்தி ருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி வேகமாக 63-வேலம்பாளையம் நோக்கி வேகமாக அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார். போலீஸாரும் அவரை விரட்டி சென்றதாக தெரிகிறது.
மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 63-வேலம்பா ளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த இளைஞரின் வாகனம்,முன்னால் சென்ற சரக்கு வேனின்பின்புறத்தில் மோதி விபத்துக்குள் ளானது. சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்தார். அவரது உடல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுதொடர்பாக மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில், உயிரிழந்த நபர், பல்லடம் அனுப்பட்டி அருகே கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எஸ்.அஜித்குமார் (23) என்பதும், தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயார் சாந்தியுடன் வசித்து வந்ததும், காவல் துறையில் பணிக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர் ஒருகட்டத்தில் முடியா மல் போகவே, காக்கி சீருடை அணிந்து நடித்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, காவல் துறையினரிட மும் விசாாிக்க வேண்டும் என்றும், அவர்கள் விரட்டிச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது என்றும், அப்பகுதி மக்கள் சிலர் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில், அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக அமைந் துள்ளது. காவல் துறையினர் விரட்டியதே விபத்துக்கு காரணம் என தவறான தகவல் பரப்பப்படுகிறது. சாலை விபத்தில் உயிரிழப்பு என்ற அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்படும்' என்றனர்.
இதற்கிடையே, திருப்பூர் மாநகர் வீரபாண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட கணபதிபாளையம் பகுதியில் பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை, காவல் துறையை சேர்ந்த ஒருவர்பறித்துச் சென்றதாக எழுந்த புகாரின்பேரில் விசாரிக்கப் படுகிறது. இந்நிலையில், அஜித் குமார் ஓட்டிச் சென்ற வாகனம் அவருடையது தானா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.