Published : 08 Feb 2020 03:52 PM
Last Updated : 08 Feb 2020 03:52 PM

ரஜினி பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும்: ஜோதிமணி

ரஜினிகாந்த் பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டது. இறுதி நாளான இன்று (பிப்.8) திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கரூர் ஜவஹர்பஜாரில் வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிமணி, "மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது. அப்படி மேற்கொண்டால் அதற்காக என் உயிரையும் கொடுத்தும் அதனை தடுப்பேன். 85 பக்க பட்ஜெட் உரையில் வேலையின்மை பிரச்சினை குறித்து எதுவும் இடம்பெறவில்லை. பிரதமர் உரையிலும் வேலையின்மை பற்றி குறிப்பிடவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஒரு கந்துவட்டிக்காரர். அவர் பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும். பாஜகவின் கொள்கைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழும் போதெல்லாம் அவர் குரல் கொடுப்பார். தமிழக மக்கள் பிரச்சினைக்காக அவர் ஒரு போதும் குரல் கொடுத்ததில்லை" என்றார்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி கூறியது, "போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற புகாரில் என் பெயரோ, என் தம்பி பெயரோ இல்லாத நிலையில் இவ்வழக்கில் நீதிமன்றம் விடுவித்த நிலையில் முதல்வர், அமைச்சர் ஆகியோர் தூண்டுதலின் பேரில் மீண்டும் வழக்கு தொடரப்பட் டது. இவ்வழக்கில் நோட்டீஸ் அனுப்பாமல் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னை வீட்டிலிருந்து ரூ.1.57 லட்சம், 7 பவுன் மட்டுமே கைப்பற்றப்பட்டது.

கரூர் டெக்ஸிலிருந்து அந்நிறுவன கணக்கு வழக்கு, காசோலைகள் மட்டுமே கைப்பற்றப்பட் டுள்ளன. என்னை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்வதற்கான சூழ்ச்சி தான் இது. அரசு காவல்துறை மூலம் வழக்குகளை போட்டு வருகிறது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அவற்றை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.

அமைச்சர் எல்ஜிபி பெட்ரோல் பங்க், சுக்காலியூரில் 150 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறினேன். இதற்காக வழக்கு போடுங்கள் என்று கூறியும் வழக்கு போடவில்லை.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முதல்வர் மற்றும் அந்த துறை அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x