தீரஜ் குமார், பிரதீப் யாதவ் | கோப்புப் படம்.
தீரஜ் குமார், பிரதீப் யாதவ் | கோப்புப் படம்.

பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உட்பட  4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Published on

தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் அவர்கள் முன்பு வகித்த பதவியும்:

1. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பதவி வகித்த பிரதீப் யாதவ் மாற்றப்பட்டு, கைத்தறி மற்றும் காதி துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தமிழ்நாடு போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் சந்திரமோகன் மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மாற்றப்பட்டு போக்குவரத்து கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

4.இளைஞர் மற்றும் விளையாட்டு வளர்ச்சித் துறை மற்றும் எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் மாற்றப்பட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையையும் கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு தலைமைச் செயலரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in