Published : 01 Feb 2020 11:57 am

Updated : 01 Feb 2020 12:49 pm

 

Published : 01 Feb 2020 11:57 AM
Last Updated : 01 Feb 2020 12:49 PM

'இந்து தமிழ் திசை' சார்பில் அன்பாசிரியர் விருது: பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

anbasiriyar-award

மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர். ​அந்த நல்லடையாள ஆசிரியர்களை 'அன்பாசிரியர்' என்ற விருதோடு கவுரவிக்க, பெருமையுடன் காத்திருக்கிறது 'இந்து தமிழ் திசை'.​ தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இந்த முன்னெடுப்புக்குத் துணை நிற்கிறது. ​

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?​
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.​
* தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.​

என்ன செய்ய வேண்டும்?​
* 'இந்து தமிழ்' இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.​
* அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள்/ வீடியோக்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும்.
* இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலஜா சாலை, சென்னை- 2 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பலாம்.

அன்பாசிரியர் தேர்வு முறை​
* விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 'இந்து தமிழ்' அலுவலத்தில் முதல் கட்ட நேர்காணல் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும். ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வர வேண்டியிருக்கும்.
* நேர்காணலுக்கு தன்னிடமுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும்.
* மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிக்கட்ட நேர்காணல் பிப்ரவரி 16-ம் தேதி நடத்தப்படும். ​
* மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 37 பேருடன் புதுச்சேரி சேர்த்து, 38 பேருக்கு பிப்ரவரி 23-ம் தேதி 'அன்பாசிரியர்' விருது வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?- https://connect.hindutamil.in/ இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 7, 2020.
கூடுதல் தகவல்களுக்கு: முருகேசன் - 9444360421

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அன்பாசிரியர் விருது​இந்து தமிழ்பள்ளி ஆசிரியர்கள்Anbasiriyar awardஆசிரியர்கள்இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author