

அதிமுக எம்.பி.ரவீந்தரநாத் குமார் கார் முற்றுகையிடப்பட்ட சம்பவத்திற்கு நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எதிர்வினை கிடைக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
''ரவீந்திரநாத் குமாரை அடிப்பீங்கன்னா, மீதி 38 பயல்களையும் தேசப்பக்தர்கள் அதே மாதிரி நடத்தனும்னு முடிவு எடுத்தா தமிழ்நாடு தாங்குமா?
நாம மத்தியில ஆட்சியில இருக்கிறோம். நம்ம கூட்டணி மாநிலத்தில ஆட்சியில இருக்கிறது. அமைதியா இருக்கணும் முடிவு பண்ணதால அமைதியா இருக்கோம். அதை பலவீனமா யாரும் நினைச்சடக் கூடாது.
ஏன்னா, நியூட்டன்ஸ் லா என்ன சொல்லுது? (ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு ஆதரிச்சதுக்காக ஒரு எம்.பியை அடிச்சா, ஆதரிக்காம இருந்ததுக்காக அடிப்பாங்கன்னு நியூட்டன்ஸ்லா சொல்லுது, எச்.ராஜா சொல்லலை.''
இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.