

தமிழ்நாட்டிலிருந்து 7 பேருக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, அவர்களில் ஒருவர் கேரளத்தை சேர்ந்த ஐ,.ஐ.டி. பேராசிரியர், இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள், 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகள், 141 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
பூமிதான இயக்கப் போராளியும், சுற்றுச்சூழலை காக்கவும், வேளாண் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் இளம் வயதிலிருந்தே போராடி வரும் தியாகப் பெண்மணி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷன் விருது பெறும் தொழிலதிபர் வேணு சீனிவாசன், பத்மஸ்ரீ விருது பெறும் பாம்பே சகோதரிகள், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றும் சுந்தரம் ராமகிருஷ்ணன், நாதஸ்வரக் கலைஞர்கள் கலீஷாபி & ஷேக் முகமது ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டிலிருந்து 7 பேருக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் கேரளத்தை சேர்ந்த ஐ,.ஐ.டி. பேராசிரியர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. அடுத்த ஆண்டிலாவது அதிக விருதுகள் வழங்கப்பட வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.