ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் மாநாடு: திமுக அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் மாநாடு: திமுக அறிவிப்பு
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் - உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு - ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 31-1-2020 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில், திருச்சி, மணப்பாறை சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரி (CARE COLLEGE) வளாகத்தில் நடைபெறும்.

கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் அனைவரும், தங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்/ பொறுப்பாளர்களை அணுகி, உரிய அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in