வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்ற அதிமுக வேட்பாளர்: தேர்தல் ரத்து

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் தேர்தல் நடைபெறும் முன்பே வாக்குப்பெட்டியை அதிமுக உறுப்பினர் தூக்கிச் சென்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 வார்டுகளில் திமுக கூட்டணி 7, அதிமுக 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒன்றியக்குழு அலுவலகத்திற்கு 10 உறுப்பினர்களும் காலையில் வந்தனர். அப்போது, அதிமுகவைச் சோ்ந்த 1 ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜ், தேர்தல் நடைபெறும் முன்பே திடீரென வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்றுவிட்டார். இதனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் 7 பேரும் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமா்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே வாக்குப்பெட்டியை உறுப்பினர் ஒருவர் தூக்கிச் சென்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகாதேவி அறிவித்து அறிவிக்கையை ஒட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in