தமமுகவினர் முற்றுகைப் போராட்ட அறிவிப்பு: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

தமமுகவினர் முற்றுகைப் போராட்ட அறிவிப்பு: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Updated on
1 min read

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் விமான நிலையம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் பெருங்குடி, மண்டேலா நகர், சின்னஉடைப்பு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்தபின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

பார்வையாளர்கள், பயணிகள் கடும் பரிசோதனைக்குப் பின்னரே விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கியூஆர்டி எனப்படும் அதி விரைவு அதிரடிப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் பகுதியில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க இந்தப் படைப்பிரிவு தயாராக செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 4 டிஸ்பிகள் , 12 இன்ஸ்பெக்டர்கள், 36. சார்பு ஆய்வாளர்கள், 136 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in