மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள்: அதிமுக-2, திமுக-1, சுயேட்சை-1 வார்டில் வெற்றி

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பரமேஸ்வரி
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பரமேஸ்வரி
Updated on
1 min read

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 4 வார்டுகளில் 2 வார்டுகளில் அதிமுகவும், 1 வார்டில் திமுகவும், 1 வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை யாதவா ஆண்கள் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

அதில் முதல் சுற்று அடிப்படையில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் எண்ணிக்கை முடிந்ததன் அடிப்படையில் 4 ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதாக அறிவிகப்பட்டுள்ளது.

அதில், 1-வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரமேஸ்வரி வெற்றி பெற்றார். 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் முருகேசன் தேர்வானார். 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக சுயேட்சை வேட்பாளர் ஆரோக்கியமேரி வெற்றி பெற்றார். 4-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் ஜெகதா வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள்:

அம்பலத்தாடி ஊராட்சி மன்றத் தலைவராக வீரமணிகண்டன், சிறுவாலை ஊராட்சி மன்றத் தலைவராக பாண்டியம்மாள், வைரவநத்தம் ஊராட்சி மன்றத் தலைவராக கீதா மருதுபாண்டியன், தேனூர் ஊராட்சி மன்றத் தலைவராக வி.டி.பாலு, தோடனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஜெய்சங்கர், வயலூர் ஊராட்சி மன்றத் தலைவராக பார்த்தசாரதி, சமயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக வழக்கறிஞர் மலையாளம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in