தமிழகம், புதுவையில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

“கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 6 செ.மீ. மழையும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலத்தில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை இல்லை”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in