பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாத பாஜக: ஸ்டாலின் சாடல்

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாத பாஜக: ஸ்டாலின் சாடல்
Updated on
1 min read

6 ஆண்டு கால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாததால் இந்தியப் பொருளாதாரம் ஆபத்தில் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச நிதியமும், பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டு கால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது.

அதிமுக அரசின் நிர்வாகத் திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அமைதியை விரும்பும் மக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது அதனை தான்'' என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in