கனிமொழி தலைமையில் ஆக.22-ல் மதுவுக்கு எதிராக திமுக மகளிர் மாநாடு: கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு

கனிமொழி தலைமையில் ஆக.22-ல் மதுவுக்கு எதிராக திமுக மகளிர் மாநாடு: கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை படப்பை அருகே உள்ள கரசங்கால் கிராமம் துண்டல் கழனியில் மதுவுக்கு எதிரான திமுக மகளிர் மாநாடு நாளை (ஆகஸ்ட் 22) நடைபெறவுள்ளது.

திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், மகளிரணி தலைவர் காஞ்சனா கமலநாதன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பாக கனிமொழி இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுவுக்கு எதிராக திமுக மகளிரணி நடத்தும் மாநாட்டில் கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பதால் அனைத்து மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in