தமிழக வானிலை நிலவரம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வானிலை நிலவரம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

“கடந்த 24 மணிநேரத்தில் திருத்தணி 3 செ.மீ மழையும், ஆனைக்காரன் சத்திரம், வேதாரண்யம் -கமுதி ரெட்ஹில்ஸ், பூண்டி ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், திருவாரூர் பேராவூரணி, மணமேல்குடி, பொன்னேரி, நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், முத்துப்பேட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 1 செ. மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in