தமிழக வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

“தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் காணப்படும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31°செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸாகவும் இருக்கும்.

தென் தமிழகத்தில் கடல் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும். அலைகளின் உயரம் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை இருக்கும். இது இன்று மாலை வரை நீடிக்கும்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in