

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீபக் கொப்பரை நேற்று கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை மகா தீபம் ஏற்றப் படுகிறது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வம் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங் கியது. பின்னர், மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 1-ம் தேதி கொடியேற்றப் பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்ப மானது. இதையடுத்து, 63 நாயன் மார்கள், வெள்ளி தேரோட்டம், மகா தேரோட்டம் (பஞ்ச ரதங்கள்), பிச்சாண்டவர் உற்சவம் என நடை பெற்றது. இதில், முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை கோயிலில் ஏற்றப்பட்டது. 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தீபம் ஏற்றப்படும் மகா கொப்ப ரைக்கு நேற்று அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப் பட்டது. பின்னர், மலையடிவாரத் தில் இருந்து 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் காடா துணி மற்றும் நெய் ஆகியவை இன்று கொண்டு செல்லப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா வையொட்டி, அண்ணாமலையார் கோயில், மூலவர் சந்நிதி, உண்ணா முலை அம்மன் சந்நிதி மற்றும் தீப தரிசன மண்டபம் உட்பட அனைத்து இடங்களும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மலர் மாலைகளை கொண்டு தோரணங் களும் கட்டப்பட்டுள்ளன. இதேபோல், கோயில் சுற்றுச் சுவர் மற்றும் 9 கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, கார்த்திகை மாத பவுர்ணமி 11-ம் தேதி (நாளை) முற்பகல் 11.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 12-ம் தேதி முற்பகல் 11.39 மணிக்கு நிறைவு பெறுகிறது. அப்போது, பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.