ஆற்காடு நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 பவுன் ரூ.5 லட்சம் கொள்ளை

ஆற்காடு நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 பவுன் ரூ.5 லட்சம் கொள்ளை
Updated on
1 min read

ஆற்காடு பூபதி நகரைச் சேர்ந்த வர் செந்தில்குமார். நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் பெரம்பலூர் சென்றிருந்தார்.

நேற்று காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டுகள் உடைக் கப்பட்டிருந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த 3 பீரோக்களை மர்ம நபர்கள் திறந்து, 100 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. தகவல றிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி மதிவாணன், ஆய்வாளர்கள் சுப்பையா, மங்கையர்கரசி, பார்த்தசாரதி ஆகியோர் விசா ரணை செய்தனர்.

தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாரி ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டில் விசாரித்தனர்.

கடந்த ஜூன் மாதம் வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தை செந்தில்குமார் எடுத் துள்ளார். அதனை நிதி நிறுவனத் தில் முதலீடு செய்துள்ளார். எவ் வளவு பணம் கொள்ளை போயுள் ளது என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

தொழில்முறையில் வீடு புகுந்து கொள்ளயடிக்கும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் முடிந்ததும் அவர்களது தடயங்கள் எதுவும் போலீஸாருக்கு சிக்கக்கூடாது என்பதற்காக ஈரத் துணியால் வீட்டை சுத்தம் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து 3 தனிப்படை போலீஸார் விசார ணையை தொடங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in