

தஞ்சாவூர்
கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வீசிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலை யில் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க இன்னும் போராடிக் கொண் டிருக்கின்றனர் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளும், மீனவர்களும்.
கஜா புயல் பாதிப்பில் தஞ் சாவூர் மாவட்டத்தில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் போயின. இதனால் தென்னை விவசாயிகளும், அதைச் சார்ந்திருந்த தொழிலாளர்களும் இன்னமும் புயல் பாதிப்பிலிருந்து மீளவில்லை. ஓராண்டாகியும் புயலின் பாதிப்பு என்பது நீங்காத வடுவாகவே உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தென்னை விவசாயிகளின் நிலை தற்போது எப்படி உள்ளது என்று நேரில் சென்று பார்த்தபோது, ‘‘பேராவூரணி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக நெல் விவசாயம் என்பது அடியோடு மாறி, தென்னை விவசாயம் பிரதானமாக இருந்தது. இதனால் தேங்காய் கொப்பரை விற்பனையில் வருவாய் ஈட்டி வந்த தென்னை விவசாயிகளை நிலைகுலைய வைத்துவிட்டது கஜா புயல். புயலுக்குப் பிறகு எஞ்சியுள்ள தென்னை மரங்களும் கடந்த ஓராண்டாக காய்ப்பு ஏதுமின்றி மலடாய் நிற்கின்றன" என்று வேதனையுடன் கூறினார் பேராவூரணியை அடுத்த முடச்சிக் காட்டைச் சேர்ந்த தென்னை விவசாயி வி.எம்.தமிழ்செல்வம்.
‘‘கஜா புயலுக்கு பிறகு கடலில் மீன்வளம் குறைந்துவிட்டது. முன்புபோல கடலில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். அதே போல புயலில் சேதமடைந்த விசைப்படகுகள், நாட்டுப்படகு களை இன்னமும் சீரமைக்க முடி யாமல் உள்ளனர். இன்ஜின்கள், மீன்பிடிவலை என அனைத்தும் சேதமடைந்தாலும், அரசு வழங்கிய நிவாரணம் என்பது சொற்பமே. இப்பகுதி மீனவர்கள் கூலி வேலைக்கு திருப்பூர், கோயமுத் தூருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’’ என்றார் மல்லிப்பட்டினம் தாஜுதீன்.
‘‘புயலின்போது தன்னார்வ அமைப்புகள் வழங்கிய நிவாரண பொருட்கள் எல்லாம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான், அரசால் மட்டுமே நீண்டகால வாழ்வாதார உதவியை வழங்க முடியும். அதை முன்னெடுக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்கிறார் பேரா வூரணியைச் சேர்ந்த கல்வியாளர் தர்.
‘‘மீனவர்களுக்கும், புயல் பாதிப் பின்போது பாதிக்கப்பட்டவர் களுக்கும் இதுவரை அரசால் ஒரு வீடுகூட கட்டித் தரப்படவில்லை. நிவாரண கணக்கெடுப்பைகூட முறையாக செய்யாமல், பலருக் கும் நிவாரண நிதி முறை கேடாக வழங்கப்பட்டது’’ என்றார் அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயல் பாதிப்பு களத்தில் இன்றுவரை உதவிகளை செய்து வரும் பேரா சிரியர் செய்யது அகமது கபீர்.
மாவட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து மாவட்ட நிர்வாக வட்டார அதிகாரி கள் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலின்போது 17 பேர் மரண மடைந்தனர். இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 36 லட்சத்து 99 ஆயிரத்து 197 தென்னை மரங் கள் சேதமடைந்துள்ளன. ஒரு தென்னை மரத்துக்கு ரூ.1,100 இழப் பீடு என ரூ.409 கோடியே 28 லட்சத்து 16 ஆயிரத்து 700 வழங்கப்பட் டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 179 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகள் பகுதியாகவும், முழுமை யாகவும் பாதிப்பு எனக் கணக் கிட்டு நிவாரண நிதி வழங்கப் பட்டுள்ளது. மேலும், பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி வட்டங்களில் 1 லட்சத்து 49 ஆயி ரத்து 766 குடும்பங்களுக்கு 27 வகை யான நிவாரணப் பொருட்களும், தலா ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,157 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், 1,193 இன்ஜின்கள், 1,497 மீன்பிடி வலைகள் சேதமானதாக கணக்கிட்டு ரூ.14 கோடியே 70 லட்சத்து 55 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை உட்பட பல்வேறு இழப்பீடுகளை கணக்கெடுத்து கஜா புயல் பாதிப்புக்கென தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.500 கோடி வரை நிவாரண நிதியும், இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.