விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு
Updated on
1 min read

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன், வி.நாராய ணன் ஆகியோர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக் கப்பட்டன.

இதில், இரு தொகுதி களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. விக்கிரவாண்டியில் 44,924 வாக்குகள் வித்தியாசத் தில் அதிமுக வேட்பாளர் முத் தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் 32,445 வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இருவரும் 25-ம் தேதி சேலத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தங்களது வெற்றிச் சான்றிதழ் களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்கள் இருவரும் இன்று (நவ.1) காலை 9.30 மணி அளவில் சட்டப்பேரவை தலைவர் பி.தன பால் முன்னிலையில் எம்எல்ஏக் களாக பதவியேற்பார்கள் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in