தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தமிழகத்தில் பரவலாக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கிய நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தமிழகம் தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்கள்,கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் பரவலாக கனமழையும் ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்றும் அதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in