நாங்குநேரியில் 30 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி இடமாற்றம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

நாங்குநேரியில் 30 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி இடமாற்றம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
Updated on
1 min read

நெல்லை

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி‌ நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திமுக சார்பில் புகார் அளித்துள்ளது.

நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த 12-ம் தேதி நள்ளிரவு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அந்த புகாரில்‌‌ குறிப்பிடப்பட்டுள்ளது‌.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in