புதுக்கோட்டையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்
Updated on
1 min read

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் எம்.ஷேக்அப்துல்லா. இவரது மனைவி ரிஸ்வானா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2017-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ரிஸ்வானாவுடன் சேர்ந்து வாழ முடியாதென நேற்று முன்தினம் ஷேக்அப்துல்லா மூன்று முறை தலாக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஷேக்அப்துல்லா, அவரது தந்தை முகமது மீரான், தாய் மகபூப் பீவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in