‘ஆக்டினோ பாக்டீரியா’வில் இருந்து காசநோய், எச்ஐவி, எலி காய்ச்சலுக்கு புதிய மருந்து: சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் கண்டுபிடிப்பு

முதுமுனைவராக ஆய்வை நிறைவு செய்த பேராசிரியர் ஆர்.பாலகுருநாத னுக்கு, வாழ்த்து தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல்.
முதுமுனைவராக ஆய்வை நிறைவு செய்த பேராசிரியர் ஆர்.பாலகுருநாத னுக்கு, வாழ்த்து தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல்.
Updated on
1 min read

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட 27 ஆராய்ச்சித் துறைகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் பட்ட ஆய்வாளர் (பிஎச்டி), முதுநிலை ஆராய்ச்சி (பிடிஎப்) ஆகிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வியல் முதுமுனைவர் பட் டத்துக்கான ஆய்வினைத் தொடங்க 2017-ல் ஆட்சிக்குழு அனுமதி அளித்து அதற்கான விதிமுறைக ளும் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில், பெரியார் பல் கலைக்கழகத்தில் முதல்முறை யாக, ஆய்வியல் முதுமுனைவர் (டிஎஸ்சி) பட்டத்துக்காக நுண்ணுயி ரியல் துறைத் தலைவர் மற்றும் பேரா சிரியர் ஆர்.பாலகுருநாதனுக்கு, ‘ஆக்டினோ பாக்டீரியாவின் மருத்துவப் பயன்கள்’ என்ற தலைப் பில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

ஆய்வுப் பணிகள் முடிந்த நிலை யில், ஆய்வறிக்கையானது, மதிப் பீட்டுக்காக இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

பேராசிரியர் ஆர்.பாலகுருநா தன் முதுமுனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில், ‘ஆக்டினோ பாக்டீ ரியா’வில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி யில், காசநோய், எச்ஐவி, எலிக் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான புதிய மருந்துப் பொருட்களை கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச் சியின் மூலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் முதல் முதுமுனைவர் என்ற பெருமையை பேராசிரியர் பாலகுருநாதன் பெற்றுள்ளார்.

புதிய கண்டுபிடிப்பு குறித்து பாலகுருநாதன் கூறியதாவது: ‘ஆக்டினோ பாக்டீரியா’ என்பது நிலம் மற்றும் கடலில் உள்ள மண் ணில் அதிகம் காணப்படுகிறது. மழை பெய்யும்போது, மண்ணில் இருந்து ஒரு வாசனை பரவுவதற்கு ‘ஆக்டினோ பாக்டீரியா’தான் கார ணம். முதுமுனைவர் பட்டத்துக் காக, கடல் மண்ணில் இருக்கும் ‘ஆக் டினோ பாக்டீரியா’வின் பயன்கள் குறித்து, 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியை தொடங்கினேன்.

ஆராய்ச்சியின்போது, 20 ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழி காட்டியாக இருந்தேன். ஆராய்ச்சி தொடர்பாக நான் எழுதிய கட்டுரை கள் 127 மருத்துவ இதழ்களில் வெளியாகி உள்ளன. அதில் ‘நேச்சர்’ (Nature) என்ற மருத்துவ இதழிலும் கட்டுரை வெளியானது. மத்திய அர சின் நிதி நல்கை குழு அனுமதி யுடன் ரூ.2 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியில், ‘ஆக்டினோ பாக் டீரியா’வில் இருந்து, காசநோய், எச்ஐவி ஆகியவற்றுக்கு ஒரே வகை மருந்தை கண்டுபிடித்துள்ளோம். தற்போது, 2 நோய் பாதிப்புக்கும் தனித்தனி மருந்துகளே உள்ளன. மேலும், எலிக் காய்ச்சலுக்கான மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இந்த மருந்துகள், பக்க விளை வுகள் அற்றதாக இருக்கும்.

7 புதிய மருந்துப் பொருட்களும் ஆய்வில் கண்டறியப்பட்டு வெவ் வேறு நிலைகளில் ஆய்வில் உள் ளன. கப்பல் அடிப்பாகம் மீன்களால் பாதிக்கப்படாமல் இருக்க, புதிய வகை பெயின்ட் கண்டுபிடித்துள் ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in