

சென்னை
சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேரிடர் அபாயங் களை குறைப்பதற்கு இங்கிலாந்து தூதரகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் பேரிடர் அபாயங் களை குறைத்தல் தொடர்பாக, பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கான கருத்துப் பட்டறை சென்னையில் நேற்று நடந்தது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கருத்துப் பட்டறையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த காலங் களில் பேரிடர் மேலாண்மை, நிவாரணப் பணிகளை சார்ந்தே இருந்தது. தற்போது பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறை யில் மாற்றம் ஏற்பட்டு, பேரிடர் அபாயம் குறித்த மதிப்பீடு, அபாய தகவல் தொடர்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை, தணிப்பு மற்றும் திறன்மிகு உடனடி அவசர கால மீட்பு நடவடிக்கைகள் ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கி யுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் வெளி யிடப்பட்டுள்ளது.
செண்டாய் கூட்டமைப்பின் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய தமிழக அரசு பல்வேறு பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பேரிடர் அபாய குறைப்பு மற்றும் தணிப்பை வலுப்படுத்த கள ஆய்வு மேற்கொள்ள இந்திய அரசுக்கும், பிரிட்டிஷ் ஹை கமிஷனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், வேக மாக குறைந்துவரும் இயற்கை வாழ்விடங்களைக் கொண்ட பெரிய கடலோர மற்றும் நகர்ப்புற மக்க ளைக் கொண்ட நகரங்களான சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகியவற்றில் பேரிடர் அபாய குறைப்பு மற்றும் தணிப்பை வலுப்படுத்த பிரிட்டிஷ் ஹைகமிஷ னுடன் இணைந்து அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆய்வின் பரிந் துரைகள் அடிப்படையில், பேரி டர் அபாயக் குறைப்புக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டால் பேரிடர்களின் போது உயிரிழப்பு கள் குறைவதுடன் உள்கட்டமைப்பு களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.
இவ்வாறு அமைச்சர் உதய குமார் பேசினார்.