

திமுகவைப் பொறுத்தவரையில் கடந்த 1971-ம் ஆண்டு கணபதியும், 1989-ம் ஆண்டு ஆச்சியூர் மணியும் போட்டியிட்டு வென்றனர். பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள், காங்கிரஸுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்குவதை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அதேசமயம் அதிமுகவைப் பொறுத்தவரை தொடர்ந்து நேரடியாக களம் கண்ட தொகுதி. எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை களம் கண்ட பல தேர்தல்களிலும் அதிமுகவே போட்டியிட்டுள்ளது. 5 தேர்தல்களில் வெற்றியும் பெற்றுள்ளது.
ஆளும் கட்சியாக இருந்த தேர்தல்களில் தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் அதிமுக வென்று வந்தது. ஆனால் கடந்த 2016-ம் ஆணடு தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் நாங்குநேரி தொகுதியில் தோல்வியைத் தழுவியது.
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி
| ஆண்டு | வென்றவர் | கட்சி |
| 1967 | துரைபாண்டியன் | காங்கிரஸ் |
| 1971 | டி.கணபதி | திமுக |
| 1977 | ஜான் வின்சென்ட் | ஜனதா கட்சி |
| 1980 | ஜான் வின்சென்ட் | அதிமுக |
| 1984 | ஜான் வின்சென்ட் | அதிமுக |
| 1989 | ஆச்சியூர் மணி | திமுக |
| 1991 | நடேசன் பால்ராஜ் | அதிமுக |
| 1996 | எஸ்.வி.கிருஷ்ணன் | சிபிஐ |
| 2001 | மாணிக் ராஜ் | அதிமுக |
| 2006 | வசந்தகுமார் | காங்கிரஸ் |
| 2011 | எர்ணாவூர் நாராயணன் | அதிமுக |
| 2016 | வசந்தகுமார் | காங்கிரஸ் |
2016-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 74,932 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் 57,617 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.