

சாத்தூர்
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை பற்றி அவதூறாக பேசிய தாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜவர்மன் எம்எல்ஏ ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்தூர் காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரி வித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத் தூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடந்த 21-ம் தேதி மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூ ரைப் பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ராஜாசொக்கர், தளவாய் பாண்டியன் ஆகியோர் தலைமை யில் அக்கட்சியினர் சாத்தூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பிறகு சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடமும் காங்கிரஸ் கட்சி யினர் புகார் மனு அளித்தனர்.
வளர்ச்சிப் பணிக்கு முட்டுக்கட்டை
இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறிய தாவது: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோரைப் பற்றி அவதூறாக பேசிவருகிறார்.
மக்களவை தலைவரிடம் புகார்
விருதுநகர் மாவட்டத்துக்கு ராஜேந்திர பாலாஜி என்ன செய்தார்? அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்ற அவர், ஒரு முதலீட்டையாவது கொண்டு வந்தாரா? சிவகாசியின் வளர்ச் சிக்கு பெரிய தடையாக உள்ளார்.திருத்தங்கல் - சிவகாசி ரயில்வே மேம்பாலப் பணி தொடங்கப் படாததற்கும், சிவகாசியில் பாதா ளச் சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படாததற்கும் காரணம் ராஜேந்திர பாலாஜிதான். அவர் மீது டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளோம்.
அதோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம். என்னைப் பற்றி தவறாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மக்கள வைத் தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.