ஒரு வாரத்தில் 25,870 பேருக்கு பொறியியல் ஒதுக்கீடு

ஒரு வாரத்தில் 25,870 பேருக்கு பொறியியல் ஒதுக்கீடு
Updated on
1 min read

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் கடந்த ஒருவாரத்தில் 25,870 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று 4,865 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 1,066 பேர் கலந் தாய்வுக்கு வரவில்லை. கலந் தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களில் 3,782 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப் பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 25,870 மாணவர் களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in