முதல்வர் பழனிசாமி இன்று லண்டன் பயணம்: அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உடன் செல்கின்றனர்

முதல்வர் பழனிசாமி இன்று லண்டன் பயணம்: அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உடன் செல்கின்றனர்
Updated on
1 min read

சென்னை

சுகாதாரம், எரிசக்தி, பால்வளம் உள்ளிட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்தவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் 14 நாள் வெளி நாடு பயணமாக முதல்வர் பழனி சாமி இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்களை வெளிநாடு களில் இருந்து அறிந்துகொண்டு, தமிழகத்தில் அவற்றை செயல் படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர் கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக வும், முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடு களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெற்ற அவர், இன்று லண்டன் புறப்பட்டுச் செல் கிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இன்று காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக முதல்வர் பழனிசாமி லண்டன் செல்கிறார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என 10 பேர் உடன் செல்கின்றனர். லண்டனில், அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடும் அவர், அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து, அதை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் செய்யும் நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் தொற்றுநோய் ஏற்படுத் தும் கொசுக்களை கட்டுப்படுத் தும் தொழில்நுட்பத்துக்கான ஒப்பந் தம் கையழுத்தாகிறது. லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை யின் கிளையை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

முதலீட்டாளர்களுடன் சந்திப்பு

இதுதொடர்பான நிகழ்ச்சிகளி லும் முதல்வர் பங்கேற்கிறார். பின்னர் முதலீட்டாளர்களை சந்திக் கும் முதல்வர் பழனிசாமி, எரிசக் தித் துறை தொடர்பான தொழில் நுட்பங்களையும் கேட்டறிகிறார்.

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப்.1-ம் தேதி முதல் வர் பழனிசாமி அமெரிக்கா செல் கிறார். அங்கு நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் பல்வேறு துறை களின் தொழில்நுட்ப வளர்ச் சியை பார்வையிடுகிறார். முதலீட் டாளர்களையும் சந்திக்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க, அமைச்சர் உதயகுமார் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி லண்டன் சென்று, அங்கி ருந்து முதல்வருடன் அமெரிக்கா பயணிக்கிறார். அமெரிக்காவில் பால்வளத் தொழில்நுட்பம் உள் ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் கேட்டறிகிறார்.

14 நாட்கள்

அதன்பின் துபாய் செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு தொழில்முனைவோரிடம் முதலீட் டுக்கு அழைப்பு விடுக்கிறார். தொடர்ந்து 14 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்.10ம் தேதி தமிழகம் திரும்புகிறார். முன்னதாக, பல்வேறு துறை உயர் அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று, ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், எரிசக்தித்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் லண்டன் செல்ல உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in