

சென்னை
தென் மாவட்டங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக மின் தேவை குறைந்ததால், அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவை 14 ஆயிரம் முதல் 15 ஆயி ரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடை வெயிலின் போது, அதிகபட்ச மின்தேவை 16,500 மெகாவாட் என்ற அள வுக்கு அதிகரித்தது.
பின்னர், தென் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியதும் மின்தேவை படிப்படியாக குறைந் தது.
பருவ மழை தீவிரம்
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள தால், தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தினசரி மின்தேவை வெகுவாக குறைந்து 11 ஆயிரம் முதல் 13 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
இதன் காரணமாக, அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமாக தலா 210 மெகாவாட் திறனில் 5 அலகுகள் கொண்ட அனல்மின் நிலையம் உள்ளது. இதில் 3-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் தேசிய மின்வாரியம், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தலா 500 மெகாவாட் திறனில் 3 அலகுகள் கொண்ட கூட்டு அனல்மின் நிலையம் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் மின்தேவை குறைந்ததன் காரணமாக, இங்கு உள்ள முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.